1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vandalur animals not affecr with corona

வண்டலூர் சிங்கம், புலிகளுக்கு கொரோனா இல்லை! – பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!

Tamilnadu
சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா இல்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் வண்டலூர் விலங்குகள் பூங்காவில் உள்ள விலங்குகள் சிலவற்றிற்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் வண்டலூர் பூங்கா ஜனவரி 31 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் விலங்குகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளும் பணிகளும் தொடர்ந்தன.

இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவற்றிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
வடபழனி கோவில் கும்பாபிஷேகம்: வானில் வட்டமிட்ட கருடர்கள்!