வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (14:53 IST)

ஒருநாள் மழைக்கே அஸ்தமித்த தலைநகரம், இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? வானதி சீனிவாசன்

ஒரு நாள் மழைக்கே தலைநகரம் சென்னை அஸ்தமித்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதாகவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து உள்ள நிலையில் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி 
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் வடிகால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இனி அடுத்த மழைக்கு தண்ணீர் தேங்காத அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டது. 
 
ஆனால் நேற்று இரவு பெய்த மழை காரணமாக பல இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்கியுள்ளது பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் கோவை தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இது குறித்து கூறிய போது ’ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகள், நீரில் மூழ்கிய வாகனங்கள், அஸ்தமித்த தலைநகரம் ஆகியவைகளை பார்க்க முடிகிறது .இரண்டு ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா? விடியல் ஆட்சி என பெருமை பேசும் முதல்வர் இதற்கு பதில் சொல்வாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
 
Edited by Mahendran