வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (10:43 IST)

சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பின் ஜூனில் கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன்..!

கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வரலாறு காணாத மழை சென்னையில் பெய்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு தற்போது தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு சென்னையில் மழை பெய்து உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 1996 ஆம் ஆண்டு தென் சென்னை பகுதியில் 150 மில்லி மீட்டர் வரை மழை கொட்டி தீர்த்தது என்றும் அதன் பிறகு தற்போது தான் மழை பெய்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் நிலையில் கேரளா கர்நாடகாவில்  வரும் 24 ஆம் தேதி முதல் மழை தீவிரமடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் நிலையில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த வாரம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் ஆனால் நேற்று இரவு பெய்த மழை இருக்காது என்றும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran