வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (10:26 IST)

கனமழையால் லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்.. அதிகாரிகள் அலட்சியமா?

ஓசூரில் அந்திவாடியில் லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
 
நுகர்ப்பொருள் வாணிப கழகம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 16 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அளவில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே திறந்த வெளியில் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
 
இவை தொடர்மழையால் செய்தமடைந்து நெல்மணிகள் வீணாகி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 9 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் மூட்டைகள் அரவைக்காக அரிசி ஆலைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது 
 
ஆனால் மீதமுள்ள நெல் மூட்டைகள் தினமும் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஓசூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோனிலோ அல்லது மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்
 
Edited by Mahendran