திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (11:21 IST)

சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் உள்பட மீட்ப பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஒன்பது மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Mahendran