திமுகவை பாஜக வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை: வானதி சீனிவாசன்
திமுகவை பாஜக வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் கூறியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் வீடு மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
மேலும் பாஜக வளர்வதை கண்டு பொறுக்கமுடியாமல் வீண் ஜம்பம் அடிப்பதை விட்டுவிட்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெட்ரோல் குண்டு வீசி அவர்களை கண்டறிந்து வன்முறை கலாச்சாரத்திற்கு. வைக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்
திமுக என்ற நச்சு மரத்தை ஒற்றுமை என்ற கோடாரி கொண்டு வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது