1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (16:09 IST)

அழகிரியின் மகன் துரை தயாநிதி மத்திய அமைச்சரா???

மு க அழகிரியின் மகன் துரை தயாநிதியை வருங்கால மத்திய அமைச்சர் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு.


திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனான மு.க.அழகிரி அழகிரி சர்ச்சைக்குரிய வகையில் கட்சி தலைமை குறித்து பேசி வந்ததால் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

திமுகவை சேர்ந்தவர்கள் அவருடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்ட நிலையில் , தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி ஸ்டாலின் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் அவரது மகன் துரை தயாநிதி பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் வரும் 2024 மத்திய அமைச்சரே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது மதுரையில் பேசு பொருளாகவும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.