திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (15:47 IST)

என் வாழ்வில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் வழக்குகள் பதிவு செய்திருக்கிறேன்- அண்ணாமலை

என் வாழ்வில் 2 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை செய்து சிலரை கைது செய்து உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து முதல்வர் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்றும் கும்பகர்ணன் போல் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் அவரை எழுப்புவது எங்கள் பணி என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பற்றி தெரியுமா எனத் தெரியவில்லை. ஆனால் என் வாழ்வில் 11 ஆண்டுகளில் 5000 நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐபிசி வழக்குகளைப் பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்த முன்னாள் ஐபிஎல் அதிகாரி அண்ணாமலை 2013 ஆம் ஆண்டில் ஏடிஎஸ்பியாகப் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டு தன் பதவியை அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.