திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (15:43 IST)

தி.மு.க அரசு நடந்துகொள்வது சரியானதல்ல.- டிடிவி. தினகரன்

dinakaran
நெல் நேரடி கொள்முதலில் தமிழக அரசு விவசாயிகளை நிர்பந்திப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்படும் நெல்லின் ஈரப்பதம் 16% இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்படும் நெல்லின் ஈரப்பதம் 16% இருக்க வேண்டும் என்று தமிழக அரசு விவசாயிகளை நிர்பந்திப்பது கண்டனத்திற்குரியது.

தற்போது பெய்யும் மழையினால் நெல்லின் ஈரப்பதம் 20 லிருந்து 25 சதவீதம் வரை உள்ளது. இத்தகைய எதிர்பாராத இயற்கை பாதிப்புகளின்போது, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் 21% வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டது இப்போதும் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் தி.மு.க அரசு நடந்துகொள்வது சரியானதல்ல.

எனவே, முதலமைச்சர் இப்பிரச்னையில் நேரடியாகத் தலையிட்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை குறைந்தபட்சம் 21% வரை உயர்த்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.