1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Upcoming red alert and Orange alert districts

நவம்பர் 11, 12 எங்கெங்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலர்ட்? – மாவட்ட விவரங்கள்!

Tamilnadu
தமிழகத்தில் எதிர்வரும் 11 மற்றும் 12ம் தேதி அன்று அதிகனமழை பெய்ய உள்ள மாவட்டங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை நவம்பர் 11 அன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், பாண்டிசேரி, கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 12 அன்று சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும், விழுப்புரம், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நெல் பயிர் காப்பீடு: கடைசி நாள் அறிவிப்பு!