செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (12:54 IST)

பைக்குகளை அடித்து நொறுக்கி சென்ற ஆடி கார்! – ராஜஸ்தானில் கோர விபத்து!

ராஜஸ்தானில் சாலை ஒன்றில் ஆடி கார் ஒன்று இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி சென்ற விபத்து வீடியோ வைரலாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜோத்பூரில் பிரதான சாலை  ஒன்றில் நேற்று வழக்கமாக வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்துள்ளன. அப்போது அவ்வழியாக சென்ற ஆடி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றை அடித்து தூக்கியது. இதில் இரு சக்கர வாகனமும் அதை ஓட்டியவரும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டார்.

அந்த அதிர்ச்சி குறைவதற்குள் வேகமெடுத்த கார் அடுத்தடுத்து முன்னாள் சென்ற இரு சக்கர வாகனங்களை முட்டி தூக்கியவாரே சென்று சாலை ஓரம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.