1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2023 (13:10 IST)

பாட்னாவில் தற்போது புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது; அமித்ஷா

Amitshah
பீகார் தலைநகர் பாட்னாவில் தற்போது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாட்னாவில் தற்போது புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டல் அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது ’2024 ஆம் தேதி மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்றும் மீண்டும் இந்தியாவின் பிரதமர் மோடி தான் என்பதை உறுதியாக சொல்லுகிறேன் என்று அமித்ஷா தெரிவித்தார். 
 
மேலும் தற்போது பாட்னாவில் புகைப்படம் எடுக்கும் போட்டோஷூட் நிகழ்ச்சி தான் நடைபெற்று வருகிறது என்றும் அது எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார் 
 
எதிர்க்கட்சிகளால் கூட மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூற முடியாது என்றும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி நமது ராணுவர்களை கொன்றனர். ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி உள்ளது என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran