திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (18:41 IST)

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்: வெற்றி பெற்ற உமா ஆனந்தன் பேட்டி

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்: வெற்றி பெற்ற உமா ஆனந்தன் பேட்டி
சென்னையில் 140 திமுக வார்டு கவுன்சிலர்கள் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் பாஜகவை சேர்ந்த ஒரே ஒரு வேட்பாளரான உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார் 
வெற்றிக்கு பின்னர் அவர் அளித்த பேட்டியில் சிங்கம் சிங்கிளா தான் வரும் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் 134 வது வார்டில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 8 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார் என்று ஒரு சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்பின.
 
ஆனால் உண்மையில் பாஜகவின் உமா ஆனந்தன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது 140 திமுக கவுன்சிலர்கள் இருக்கும் மாநகராட்சியில் நீங்கள் ஒருவர் சென்று என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டபோது சிங்கம் சிங்கிளா தான் வரும் என பதிலளித்தார்.