1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP candidate uma anandhan win

சென்னையில் பாஜக உமா ஆனந்தன் வெற்றி: 8 ஓட்டுக்கள் வாங்கியதாக பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

உமா ஆனந்தன்
சென்னையில் பாஜக உமா ஆனந்தன் வெற்றி: 8 ஓட்டுக்கள் வாங்கியதாக பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!
சென்னையில் 134வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்  உமா ஆனந்தன்வெற்றி பெற்றுள்ளார். அந்த தொகுதியில்  உமா ஆனந்தன் 4 ஆயிரத்து 373 வாக்குகள் வாங்கியதாகவும் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுசீலா கோபாலகிருஷ்ணன் 2880 வாக்குகள் வாங்கியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த தொகுதியில் அதிமுகவின் அனுராதா 2109 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில மணி நேரங்களாக பாஜகவை சேர்ந்த வேட்பாளருமான  உமா ஆனந்தன் வெறும் 8 ஓட்டுகள் மட்டுமே பெற்றதாக பல ஊடகங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன
 
மேலும் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில்  உமா ஆனந்தன் 8  வாக்குகள் பெற்றுள்ளதாகவும், இது பெரியார் மண் என்றும் இதுதான் தமிழகம் என்றும் வீராவேசமாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு மாபெரும் வெற்றி- முதல்வர் ஸ்டாலின்