திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (16:45 IST)

பெண்களின் எதிரி அதிமுக: பொள்ளாச்சி விவகாரத்தில் பொங்கிய உதயநிதி!!

பெண்களின் எதிரி அதிமுக என பொள்ளாச்சி விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிமுகவை சாடியுள்ளார். 

 
கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியாவையே ஸ்தம்பிக்க செய்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொள்ளாச்சி அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், 'பெண்களுக்கு அதிகாரம் அளித்தோம்' என அரசுப்பணத்தில் அடிமைகள் விளம்பரம் செய்து கொண்டுள்ள இந்த நாளில் அதிமுக நகர மாணவரணி செயலாளர் உட்பட 3 பேர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளனர். வன்கொடுமை குற்றவாளிகளை பாதுகாப்பது தான் அதிகாரமளித்தலா?
 
அதிமுகவின் பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கு பொள்ளாச்சி வழக்கில் தொடர்புள்ளது என தலைவர் ஸ்டாலின் அவர்கள் அன்றே சொன்னார். கைதான குற்றவாளிகளுக்கும் அதிமுகவின் மாண்புமிகுக்களுக்கும் உள்ள தொடர்புகளையும் விசாரிக்க வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.