ஸிவிம்மிங் போட கத்துகொடுத்த வாத்தியார்: பேசி பேசியே பாஸாக பார்க்கும் கமல்?
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கமல் பின்வருமாறு பேசினார், சட்டச்சபை தேர்தலில் மநீம வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோடு என்ற வரையரை இல்லாத வளமான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்.
நான் எம்ஜிஆரிடம் வளர்ந்தவன். அவர் எனக்கு நீச்சல் பழகிக்கொடுத்தார். அவரிடம் இருந்து நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு அரசியலுக்கு தகுதியுடையவனாக இங்கு வந்து நிற்கிறேன். எம்ஜிஆர் எங்களுக்கானவர் என பட்டா போட்டு யாராலும் சொந்தம் கொண்டாட முடியாது.
எம்ஜிஆர் அதிமுக ஆலமரமாக வளர இரட்டை இலையை நட்டுவைத்தார். அவர் போட்ட இலையில் இப்போது இரண்டு பேர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள், அடித்துக்கொள்கிறார்கள். இருவரும் சேர்ந்து நாற்காலியின் இரு கைப்பிடியையும் பிடித்து இழுத்து உடைக்கப்போகிறார்கள்.
தற்போது உள்ள சில தேர்தல் கூட்டணிகள் உடையும், சில உருவங்கள் மாறும். அப்படி மாறும் போது கூட்டணி யாருடன் என நான் சொல்வேன் என புதிர் போட்டுள்ளார்.