1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (12:53 IST)

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அடிபடும் முன் சரண்டர் ஆன பொள்ளாச்சி ஜெயராமன்!

எனக்கும் அருளானந்தத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்று விளக்கத்தை அளித்துள்ளார் பொள்ளாச்சி ஜெயராமன். 

 
கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியாவையே ஸ்தம்பிக்க செய்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொள்ளாச்சி அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தத்தை அவரது தவறான நடவடிக்கைகளுக்காகவும், கட்சியின் பெயரை களங்கபடுத்தியதற்காகவும் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலக்குவதாகவும், அவரோடு அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அதிமுக தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
இது குறித்து துணை சபாநாயரும், அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன், கட்சிகாரர் என்ற முறையில் கூட்டங்களுக்கு எங்கேயாவது அருளானந்தம் வந்திருக்கலாம். அவரை நேற்று முன் தினம், தான் நேரில் பார்த்தேன் அதிமுகவில் அவர் சிறிய நிர்வாகியாக இருந்தாலும், எனக்கும் அவருக்கும் மற்றபடி எந்த சம்பந்தமில்லை என்று தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.