1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhayanithi Stalin protest in Coimbatore against ADMK

கொங்கு மண்டலத்தில் போராட்டம்; #போஸ்டர்பழனிசாமி ட்ரெண்டிங்!

Tamilnadu
திமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும், அதிமுகவின் ஊழல்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதாக உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவையில் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுகவினர் மீது அதிமுக அரசு காவல்துறை மூலமாக பொய்யான வழக்குகளை பதிவு செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி ஆகியோர் ஊழல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பேசிய குனியமுத்தூர் காவல் நிலையம் அருகே போராட்டம் நடத்த அனுமதி மறுத்ததாகவும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பே அனுமதி அளித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து திமுகவினர் #போஸ்டர்பழனிசாமி என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நடராஜன்: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழக வீரருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைக்குமா?