நாளை மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை! – வானிலை ஆய்வு மையம்!

cyclone
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:38 IST)
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக மழை பெய்து வருகிறது. வழக்கமான வடகிழக்கு பருவமழை பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று காலதாமதமாக இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில் நாளை முதல் கடலோரா மாவட்டங்களாக திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மழை தொடங்க உள்ளதாகவும், வங்க கடலின் வடக்கு பகுதி மற்றும் அந்தமான் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாதகமான சூழல் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :