1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. actor prakash name removed in voters list

SIR - வாக்காளர் பட்டியலில் பிரகாஷ்ராஜ் பெயர் நீக்கம்!..

prakashraj
தமிழ் சினிமாவில் டூயட் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கியவர் பிரகாஷ்ராஜ். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் கலக்கியவர். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளையும் இவர் வாங்கியிருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே அவர் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை பிரகாஷ்ராஜ் பேசி வருகிறார். சமூக ஊடகங்களில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில்தான், பெங்களூரில் அவரின் சொந்த தொகுதியிலிருந்து வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு பின் பெங்களூர் தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன்.

இது நல்ல நகைச்சுவை இல்லையா!.. நான் இந்த தொகுதியில்தான் பிறந்தேன்.. வாழ்ந்தேன்.. படித்தேன். மேலும் இத்தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்டுள்ளேன்.. உங்களை தேர்ந்தெடுக்காத மக்களின் வாக்குரிமையை நீங்கள் பறிக்கலாம்.. ஆனால் உங்களை வீழ்த்துவதற்கான எங்கள் சக்தியை தடுக்க முடியாது’ என அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மனு கொடுக்க வந்த பெண்கள்.. பனியன் மற்றும் அன்டிராயருடன் உட்கார்ந்திருந்த எம்.எல்.ஏ.. முதல்வர் கண்டனம்..