வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

பாகிஸ்தான் மத பாடசாலை வெடிப்பு: குழந்தைகள் உள்பட குறைந்தது 7 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள மத பாடசாலை ஒன்றில் வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது நிகழ்த்தப்பட்ட வெடிப்பில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்த நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேறுபட்ட வயதுப்பிரிவை சேர்ந்த குழந்தைகள் பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் உள்ள அதிகாரியொருவர் பிபிசியிடம்  தெரிவித்துள்ளார்.
 
இந்த தாக்குதலில் காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 
ஆஃப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பெஷாவர் நகரம் சமீபத்திய ஆண்டுகளில் தலிபான் கிளர்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறைகளில் சில  மோசமானவற்றை சந்தித்தது.
 
ஆறாண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள ராணுவப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் பல்வேறு குழந்தைகள் உள்பட 150க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.
 
எனினும், சமீபத்திய ஆண்டுகளில் பெஷாவரில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.