வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2021 (18:00 IST)

போலி விளம்பரம் கொடுக்கும் அடிமைகளை ஓட ஓட விரட்டும் நாள் தொலைவில் இல்லை: உதயநிதி

கடன் மீது கடன் வாங்கி போலி விளம்பரங்கள் கொடுக்கும் அடிமைகளை தமிழக பெண்கள் ஓட ஓட விரட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. peN ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் வந்ததை அடுத்து உதயநிதி பதிவு செய்துள்ள ட்வீட்டில் கூறப்பட்டிருப்பதாவது:
 
முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தின்போது சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் தவறாக நடந்து கொண்டார்’என பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரே புகார் அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய மூத்த காவல்துறை அதிகாரியால் அதேத்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை.
 
இதற்கு முன்பு பொள்ளாச்சியில் சாமானிய பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு  ஆளாக்கிய வழக்கில் அதிமுகவினரை சி.பி.ஐ கைது செய்தது. ஆளுங்கட்சியே இப்படியிருக்கும் போது, யார் கேட்க போகிறார்கள் என்ற தைரியத்தில் காவல்துறையின் மூத்த அதிகாரியே இப்படி அத்துமீறியிருப்பது அழிக்க முடியாத களங்கம்.
 
ஏற்கனவே, லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரி மீதும் இதே மாதிரியான புகாரை பெண் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். அப்போதே கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்றைக்கு இப்படியொரு பிரச்சினை வந்திருக்காது.
 
சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனே பணியிலிருந்து விடுவித்து .பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைக்கச்செய்ய வேண்டும். பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்துக்கொண்டே ’பெண்களை காக்கிறோம்’ என கடன் மீது கடன் வாங்கி போலி விளம்பரம் கொடுக்கும் அடிமைகளை தமிழக பெண்கள் ஓட ஓட விரட்டும் நாள் தொலைவில் இல்லை