புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2021 (18:01 IST)

சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் ; விசாரணைக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

காவல்துறை சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து தமிழக அரசு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறை உயர் அதிகாரி சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கூறினார். இதையடுத்து, தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ஐஏஎஸ் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைத்துள்ளது.

மேலும் புகாருக்குள்ளானவர் டிஜிபி அந்தஸ்தில் இருப்பதால் அவரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிஅக்ள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் , டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக முதன்மை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, ஐஜி அருண் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.