ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (16:27 IST)

தமிழகத்தையே விற்றுவிடுவார்கள்… அதிமுகவினர் மேல் உதயநிதி குற்றச்சாட்டு!

அதிமுகவினர் தமிழகத்தையே விற்று விடுவார்கள் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டாலும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இப்போது அவர் மதுரையில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது பேசிய அவர் ‘ என் தொகுதியில் 5 நாள் மட்டுமே பிரச்சாரம் செய்துவிட்டு இங்கு வந்துவிட்டேன். அதிமுகவினர் மூன்று ஆண்டுகளாக மோடியிடம் அத்தனை உரிமைகளையும் அடகு வைத்து விட்டனர், கொஞ்சம் விட்டால் தமிழகத்தையே விற்றுவிடுவார்கள். ஜெயலலிதா இருந்தவரை நீட்டைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் அவர் இறந்ததுமே இவர்கள் நீட்டைக் கொண்டுவந்து மாணவர்களின் உயிரைப் பறித்து விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 சதவீதம் நீட் தேர்வை ரத்து செய்வோம்’ எனக் கூறியுள்ளார்.