1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (16:26 IST)

இந்த தேர்தல் திமுகவுக்கு மூடுவிழாவாக இருக்கவேண்டும்…. முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம்!

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தேர்தல் பரபரப்பான காலகட்டத்தில் அரசியல் தலைவர்கள் சூறாவளிப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கே பி அன்பழகனுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் ‘திமுக எதிர்க்கட்சியாகவது வருவதற்கு வேலை செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இலலாததால் ஸ்டாலின் விரக்தியில் உள்ளார். இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் மூடு விழா எடுக்க வேண்டும். ஸ்டாலினுடைய முதல்வர் கனவு, கானல் நீராகும்.’ எனக் கூறியுள்ளார்.