வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (16:26 IST)

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் இன்று பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அந்த கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் எல்லாம் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கவில்லை. குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என அக்கட்சி உறுதியாக தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இன்று அந்த கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பானை சின்னத்தில் நின்றுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமா வளவன் வெற்றி பெற்றார்.