1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (12:32 IST)

திமுக அறிக்கையைப் பாராட்டிய உதயகுமாரன்!

திமுகவின் தேர்தல் அறிக்கையை பச்சைத் தமிழகம் அமைப்பின் தலைவர் சுப உதயகுமரன் பாராட்டியுள்ளார்.

இதுசம்மந்தமான உதயகுமரனின் அறிக்கை:-

எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறோம், அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.நேற்று (மார்ச் 20, 2021) நெல்லையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்குகளைத் திரும்பப்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறோம், அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.