சசிகலா குறித்து நான் தவறாக பேசவில்லை - உதயநிதி!

Sugapriya Prakash| Last Modified புதன், 13 ஜனவரி 2021 (13:02 IST)
சசிகலா குறித்து நான் தவறாக பேசவில்லை என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். 

 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.   
 
தனது பிரச்சாரத்தின் போது உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்து கிடந்தார் என பேசினார். அத்தோடு விட்டா அந்தம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என பேசினார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது.  
 
எனவே உதயநிதி ஸ்டாலின், பெண்களை தவறாக பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என வருத்தம் தெரிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து உதயநிதிக்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில் சசிகலா குறித்து நான் தவறாக பேசவில்லை என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். மேலும், பொள்ளாச்சி பெண்களுக்காக போராடாத அதிமுக என்னை கண்டித்து போராடுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :