வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடையாது – உதயநிதி ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை!

Last Updated: செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:41 IST)

திமுக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்க கூடாது எனத் தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்து விட்டோம் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது மத்திய மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று பிரச்சாரத்தில் பேசிய அவர் ‘தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ எனக் கூறியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :