தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா - கோகுல இந்திரா பேட்டி!!

Sugapriya Prakash| Last Modified புதன், 13 ஜனவரி 2021 (11:38 IST)
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆர்பாட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்களுக்கு பேட்டி. 

 
சமீபத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் கூட்டம் ஒன்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் சசிகலா குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி வழக்கறிஞர் ராஜலட்சுமி என்ற அதிமுக பிரமுகர் காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரித்து வருவதாக தெரிகிறது. வழக்கு பதிவு செய்ததற்கு முன்னதாகவே உதயநிதி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். 
 
இருப்பினும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இன்று சென்னையில் ஆர்பாட்டம் நடந்தது. இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. கட்சியின் தலைவராக சசிகலா எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர்.
 
சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. அம்மாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என பேட்டியளித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :