சூரப்பாவை டிஸ்மிஸ் செய்... உதயநிதி & கோ இன்று போராட்டம்!!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 15 அக்டோபர் 2020 (08:57 IST)
அண்ணா பல்கலைக்கழகம் முன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். 
 
ஆம், அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி அண்ணா பல்கலைக்கழகம் உறுப்புக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் திமுக இளைஞரணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். 
 
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், 'உயர்சிறப்பு அந்தஸ்து' எனும் பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் காவிப்பிடியில் சேர்க்க துடிக்கும் சூரப்பாவை கண்டித்து தலைவர் ஸ்டாலின் அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக வளாகங்களின் முன் இளைஞரணி - மாணவரணி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தருக என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
மேலும், அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும். அதை ஆர்.எஸ்.எஸ் பல்கலையாக மாற்ற துடிக்கும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சிக்குள் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :