1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 டிசம்பர் 2025 (14:13 IST)

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?
பெங்களூருவின் பழமையான சோழர் காலத்து சோமேஸ்வரா சுவாமி கோவில், கடந்த சில ஆண்டுகளாக திருமண நிகழ்வுகளை நடத்துவதை நிறுத்திவிட்டது. இதற்கு முக்கிய காரணம், விவாகரத்து வழக்குகள் திடீரென அதிகரித்தது தான் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
முன்பு ஆண்டுக்கு ஐந்துக்கும் குறைவான புகார்களை கையாண்ட நிர்வாகம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட விவாகரத்து தொடர்பான சிக்கல்களை சந்தித்துள்ளது. திருமணத்தை நடத்தி வைக்கும் அர்ச்சகர்கள், விவாகரத்து வழக்குகளில் சாட்சிகளாக நீதிமன்றங்களுக்கு அடிக்கடி அழைக்கப்படுவதால், தங்கள் நேரத்தை ஆலய சடங்குகளை விட சட்ட சிக்கல்களிலேயே செலவிட நேரிட்டது.
 
மேலும், சிலர் போலி ஆவணங்களை கொடுத்துத் திருமணம் செய்து கொள்வதால், கோவில் நிர்வாகத்திற்கு சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இது கோவிலின் புகழை பாதிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அர்ச்சகர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவும், கோவிலின் புனிதத்தை பாதுகாக்கவும் தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva