மத்திய அமைச்சரவையில் இணைகிறதா அதிமுக? அமைச்சர் பரபரப்பு தகவல்
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது என்பதும், தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார் என்பதும், மீதி உள்ள 38 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றதும் என்பதும் தெரிந்ததே. இதனால் தமிழகத்தின் சார்பில் ஒரு மத்திய அமைச்சர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் விரிவாக்கத்தின் போது அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கட்டாயம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதிமுக தொண்டனாகத்தான் தான் இந்த கருத்தை கூறுவதாகவும் அதிமுகவின் அதிகார பூர்வமான கருத்து அல்ல என்றும் அவர் விளக்கினார்
ஏற்கனவே முதல்வர் பதவியை ஓ பன்னீர்செல்வம் விட்டுக் கொடுக்கும் போது தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியில் வேண்டும் என கோரிக்கை வைத்ததும் இந்த கோரிக்கை தலைமை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் மாற்றப்படும் இருக்கும் மத்திய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அவர்களுக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது