புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 டிசம்பர் 2025 (14:31 IST)

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!
மகாராஷ்டிராவின் நாக்பூரில், தேசிய அளவிலான கபடி வீராங்கனை கிரண் சூரஜ் தாடே  தனது கணவர் உறுதியளித்தபடி வேலை வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்டார்.
 
நிதி நெருக்கடியில் இருந்த கிரண், 2020ஆம் ஆண்டு ஸ்வப்னில் ஜெய்தேவ் லாம்ப்பரே என்பவரை திருமணம் செய்தார். வேலை வாங்கி தருவதாக உறுதியளித்த ஸ்வப்னில், பின்னர் காலதாமதம் செய்ததுடன், கிரணை மனரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். இதனால் கிரண் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
 
அச்சுறுத்தல்கள் தொடர்ந்ததால், கிரண் விவாகரத்து மனு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மன உளைச்சலில், டிசம்பர் 4ஆம் தேதி விஷம் அருந்திய கிரண், மூன்று நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். 
 
தற்கொலைக்கு தூண்டியதாகக் கணவர் ஸ்வப்னில் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறது.
 
Edited by Mahendran