1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 டிசம்பர் 2025 (14:18 IST)

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்
வாக்காளர் பட்டியலை திருத்தும் சிறப்புத் தீவிர திருத்த (SIR) பணியை தடுக்கும் விதமாக செயல்பட்டதற்காக உச்ச நீதிமன்றம் மேற்கு வங்க அரசை இன்று கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த வாக்காளர் கணக்கெடுப்பு பணியை தடுக்கும் மாநில அரசுகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும், தேவைப்பட்டால் தாமதப்படுத்தும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்துக் கொள்ள நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
எந்தவொரு மாநிலமும் சட்டத்தை மீற அனுமதிக்க முடியாது என்பதை வலியுறுத்தி, இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியை மாநிலங்கள் தடுக்கவோ தாமதப்படுத்தவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் மிக தெளிவாக உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் நாட்டின் ஜனநாயக நடைமுறைக்கு கடுமையான அச்சுறுத்தலாக கருதப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேற்கு வங்கத்தில் இந்த திருத்த பணிக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு மற்றும் இடையூறுகள் குறித்தே நீதிமன்றம் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
 
 
Edited by Siva