செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 டிசம்பர் 2025 (14:23 IST)

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் தனது முதல் பொதுக்கூட்டத்தை நடத்தினார். 
 
தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியதற்கு முதல்வர் என். ரங்கசாமிக்கு அவர் நன்றி தெரிவித்தார். "புதுச்சேரி அரசு, தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசைப் போல இல்லை," என்று கூறிய அவர், தமிழக அரசு புதுச்சேரியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று விமர்சித்தார்.
 
அரசியல் முன்னோடியாக எம்.ஜி.ஆரை சுட்டிக்காட்டிய விஜய், தனது கட்சியின் கொடி தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் பறக்கும் என்று அறிவித்தார். 
 
தி.மு.க. "மக்களை ஏமாற்றுகிறது" என்றும், மத்திய அரசு "தமிழகத்தை போல புதுச்சேரியை மூலைக்குத் தள்ள கூடாது" என்றும் அவர் குற்றம் சாட்டினார். 
 
ரேஷன் கடைகள் இல்லாதது, மீனவர்கள் பிரச்சினை, புதிய ரயில் பாதை போன்ற உள்ளூர் பிரச்சினைகளையும் அவர் எழுப்பினார்.
 
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழகத்தில் தங்கள் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாலேயே இந்த கூட்டம் இங்கு நடக்கிறது என்று குறை கூறினார்.
 
Edited by Siva