நீங்க இருக்கவரை பாஜக வளராது, தாமரை மலராது! – எல்.முருகனுக்கு இளங்கோவன் பதிலடி!

Prasanth Karthick| Last Modified புதன், 14 அக்டோபர் 2020 (14:50 IST)
திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ ஆக போகிறது என பாஜக தலைவர் எல்.முருகன் பேசியதற்கு டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி தரும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான மக்கள் புகார்கள், தேவைகளை ஆராய்ந்து அறிக்கைகளை தயார் செய்ய அந்த குழு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் “மக்கள் பலர் பாஜகவை பற்றி நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கைகள் ஜீரோவாக போகின்றன” என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் “திமுக தேர்தல் அறிக்கை ஜீரோவாக என்ன இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் “தேர்தலில் போட்டியிட்ட பாஜகதான் ஜீரோவாகி இருக்கிறது. முருகன் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது, தாமரை மலராது” என்று கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :