1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. KS Alagiri says MK Satlin will be CM Candidate

திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? அழகிரி கூறுவது என்ன?

தமிழகம்
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தை பொறுத்த வரை திமுக கூட்டணி பலமாகவே உள்ளது என கருத்து. 
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. திமுக ஆட்சியில் அமர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எப்படியாவது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என திமுக மும்முரமாக வேலை செய்து வருகிறது.
 
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தை பொறுத்த வரை திமுக கூட்டணி பலமாகவே உள்ளது. நாங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கிறோம். 
 
நாடளுமன்ற தேர்தலின் போது ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் என அறிவித்தார். அது போது இந்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலினே கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக இருப்பார். இது கூட்டணி கட்சிகளின் ஒருமித்த கருத்து என தெரிவித்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு!