தொடர்புடைய செய்திகள்
- பெண்களுக்கு பாதுகாப்பில்லை; சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை
- சினிமா டிக்கெட் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞர்
- இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்று செல்போன் பறிப்பு - 4 கி.மீ துரத்தி பிடித்த வாலிபர்
- சாம்பாரில் கரப்பான்பூச்சி - 5 லட்சம் கேட்டு பிரபல உணவகத்தை மிரட்டிய இளைஞர் கைது
- காது கேளாத சிறுமியை சீரழித்த 15 பேர் - சென்னையில் அதிர்ச்சி
சென்னை அருகே சரிந்து விழுந்த கட்டிட சாரம்: 30 பேர் கதி என்ன?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மெளலிவாக்கம் அருகே கட்டிடம் ஒன்று சரிந்த விழுந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் மீண்டு வராத நிலையில் சற்றுமுன்னர் சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியில் உள்ள கட்டிடம் ஒன்றின் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வந்ததாகவும், இரண்டு மாடிகள் கொண்ட இந்த கட்டிட சாரம் சரிந்ததில் அருகில் இருந்த வீடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப்படையினர் இதுவரை 5 பேர்களை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும், இருப்பினும் இன்னும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
