1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஜூலை 2018 (11:13 IST)

சாம்பாரில் கரப்பான்பூச்சி - 5 லட்சம் கேட்டு பிரபல உணவகத்தை மிரட்டிய இளைஞர் கைது

சாம்பாரில் கரப்பான்பூச்சி விழுந்துவிட்டது என பொய் சொல்லி பிரபல உணவக நிர்வாகத்தை மிரட்டி 5 லட்சம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்றைய நவீன உலகத்தில் மக்கள் எவ்வாறு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு சில கும்பல் மக்களை எவ்வாறு ஏமாற்றி பணம் சம்பாதிப்பது என டிசைன் டிசைனாக யோசித்து பணத்தை திருடி வருகிறது. அப்படி தான் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
 
சென்னை வேளச்சேரியில் தமிழ்க்கடவுள் பெயரில் இயங்கும் பிரபலமான ஓட்டலுக்கு சிட்டியில் பல கிளைகள் உண்டு. எந்நேரமும் இந்த கடையில் கூட்டம் அலைமோதும். அப்படி இருக்கும் வேளையில் சில தினங்களுக்கு முன்பு அந்த கடையில் இளைஞர் ஒருவர் தோசை, இட்லி பார்சல் வாங்கிச் சென்றார். 
 
சிறிது நேரத்தில் அந்த கடைக்கு வேகமாக வந்த இளைஞர் மேலாளரிடம் சண்டையிட்டார். மேமேஜர் ஏன் இப்படி சண்டையிடுகிறீர்கள் என கேட்கவே, அந்த இளைஞர் தான் வைத்திருந்த சாம்பார் பார்சலை காண்பித்தார். மேனேஜர் பார்சலை பார்த்து அதிர்ச்சியடைந்தார். காரணம் சாம்பாரில் கரப்பான் பூச்சி ஒன்று மிதந்து கொண்டிருந்தது.
 
ஒன்றும் புரியாத மேனேஜர் அந்த இளைஞரை தனி அறைக்கு கொண்டு சென்று உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அந்த இளைஞர் 5 லட்சம் கொடுத்தால் வெளியே யாரிடனும் சொல்ல மாட்டேன். இல்லையென்றால் இதனை வெளியே கூறி ஹோட்டலின் பெயரை கெடுத்துவிடுவேன் என கூறியுள்ளார். மேனேஜர் ஒரு நாள் டைம் கொடுங்க சார் என அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார். நாளைக்கு வருகிறேன் என கூறி அந்த இளைஞனும் அங்கிருந்து சென்றான்.
 
இதையடுத்து பணத்துக்காகத்தான் தங்களை அந்த இளைஞர் மிரட்டுகிறார் என்பதை புரிந்துகொண்ட ஓட்டல் நிர்வாகத்தினர் இதுபற்றி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, ஓட்டல் மேனேஜர் அந்த இளைஞனுக்கு போன் செய்து காசு கொடுக்கிறேன் வா என அழைத்துள்ளார்.
 
சம்பவ இடத்திற்கு அவன் வரவே மறைந்திருந்த போலீஸார் அந்த இளைஞசனை கப்பென்று பிடித்தனர். அவனை பிடித்து விசாரணை செய்ததில் இதே போன்று பல கடைகளில் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டான். அவரைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.