கல்லாப்பெட்டி கூட்டணி வைத்திருக்கிறார் ஸ்டாலின்!.. திமுகவை நக்கலடித்த விஜய்.
வேலூரில் தற்போது நடைபெற்று வரும் தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் பேசி வருகிறார். இந்த கூட்டத்தில் பேசிய விஜய் முதல்வர் ஸ்டாலின் செம காமெடி செய்து கொண்டிருக்கிறார். டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் போட்டி என்கிறார்.. திமுகவுக்கும், என்.டி.ஏ-வுக்கும் இடையே போட்டி என்கிறார். இது என்ன பாராளுமன்ற தேர்தலே. என்ன லாஜிக்கில் பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை.
இந்த தேர்தல் மக்களுக்கும், திமுகவுக்கும் இடையே நடக்கும் போர், ஊழலுக்கும் மக்களுக்கும் இடையேயான போர். லஞ்சத்திற்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் போர்.. இன்னும் சொல்லப்போனால் இது விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்கும் போர். நான்தான் தமிழ்நாடு.. தமிழ்நாடுதான் விஜய். திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என ஆவேசமாக பேசினார்.
மேலும், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. எல்லோரும் நண்பர்கள்தான் என கூறியிருந்தார். எல்லோரும் நண்பர்கள் எனில் ஏன் சார் கரூர் சம்பவத்தில் என் மீது பழி போட்டீர்கள்? ஏன் சார் தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டால் ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்?. என விஜய் கேள்வி எழுப்பினார்., மேலும், ஊழலும், லஞ்சமும், பொய்யும், அடக்குமுறையும்தான் உங்கள் நண்பர்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் எப்படி என்பது எங்களுக்கு தேவையில்லை. உங்கள் ஆட்சி சரியில்லை என்பதே எங்கள் கருத்து என விஜய் பேசினார்.
மேலும், 'இப்போ ஸ்டாலின் சார் ஒரு விஷயத்தை செய்து வருகிறார்.. அறிவாலயத்தின் பக்கம் யார் போனாலும் திமுக கூட்டணியில் இழுந்து போட்டுவிடுகிறார். நிழலுக்கு ஒதுங்குபவர்களையும் கூட்டணியில் சேர்த்துவிடுகிறார். அவர்களுக்கு கல்லாபெட்டி கூட்டணி என பெயர் வைக்கலாம். கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் கொடுத்து கூட்டணியில் கட்சிகளை சேர்க்கிறார். உங்களின் பழைய அரசியல் கணக்கு தோற்றுப்போகும். இது விசில் புரசி தேர்தல். தவெக உங்களை தோற்கடிக்கும் என விஜய் பேசினார்.,