வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (10:07 IST)

’ஸ்டைல் பாண்டி’ போல மிளகாய் பொடி தூவி கைவரிசை! – கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மிளகாய் பொடி தூவி வீடு ஒன்றில் திருடுவது போல நிஜமாகவே ஒரு சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவரும் இவரது உறவினராக முத்து கிருஷ்ணன் என்பவரும் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள ராஜலெட்சுமி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக யூட்யூப் வீடியோக்களை பார்த்து பயிற்சி எடுத்த அவர்கள், நகைக்கடையின் மாடி வழியாக உள்ளே இறங்கி கேஸ் வெல்டிங் மெஷினை கொண்டு ஷட்டரை உடைத்து 13 சவரன் தங்க நகைகள், 25 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மோப்ப நாய்கள் கண்டு பிடிக்காமல் இருக்க கடை முழுவதும் மிளகாய் தூளை கொட்டியுள்ளனர்.

பின்னர் கடை மாடியிலிருந்து இறங்கும்போது தவறி விழுந்த சத்தம் கேட்டு வாட்ச்மேன் அவர்களை பார்த்துள்ளார். உடனடியாக அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K