வியாழன், 30 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2023 (11:16 IST)

சிம்பு - கெளதம் கார்த்திக்கின் ''பத்து தல'' பட டிரெயிலர் ரிலீஸ்

pathu thala
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல'படத்தின் 2 வது சிங்கில் இன்று வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் வெளியான மப்டி படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை  ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார்.   நடிகர் சிம்பு மற்றும் கெளதம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, வரும்  மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், முதல் சிங்கில் வெளியாகி வைரலான நிலையில் அமீன் குரலில், கபிலன் வரிகளில் இப்படத்தின் 2வது சிங்கில் நினைவிருக்கா  என்ற பாடல் வெளியாகி எல்லோரையும் கவர்ந்தது.

இன்று, இப்படத்தின் ஆடியோ வெளீயிடு மற்றும் டிரெயிலர் நிகழ்ச்சி  நடந்து வரும் நிலையில், தற்போது டிரெயிலர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கேன்ஸ்டர் கேஜிஆர்-ஆக சிம்புவும், முதல்வராக கெளதம் மேனனும் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில், பிரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக் உள்ளிட்ட   நடிகர்கள் நடித்துள்ளனர்.   

இந்த டிரெயிலரில் 'மானை ஓநாய் கொல்லும், ஓநாயை சிறுத்தை கொல்லும், சிறுத்தையை புலி கொல்லும், புலியை  சிங்கம் கொல்லும். ஆனால், அந்தச் சிங்கத்தைக் கொல்ல இன்னொரு சிங்கம் பொறந்து வரலடா' என்று  சிம்பு கூறும் டயலாக் ரசிகர்களின் பேவரெட்டாக அமைந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இந்த டிரெயிலர் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.