செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2023 (08:25 IST)

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கு: கொலையாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அவரை கொலை செய்த குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் இருக்கும் இடம் தெரிந்து உடனடியாக போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். 
 
ஜெயப்பிரகாசை கைது செய்ய போலீசார் முயன்ற போது திடீரென போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாக தெரிகிறது. இதனை அடுத்து போலீசார் ஜெயப்பிரகாசை சுட்டு பிடித்தனர். 
 
போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயப்பிரகாஷ் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடித்த பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva