1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. perambur jewellers robbery case

பெரம்பூர் நகைக்கடை கொள்ளைக்கும் ஏடிஎம் கொள்ளைக்கும் சம்பந்தமா?

Robbery
பெரம்பூர் நகைக்கடை கொள்ளைக்கும் ஏடிஎம் கொள்ளைக்கும் சம்பந்தம் இருக்கின்றதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கம் கொள்ளை தொடர்பாக புதிய புகைப்படங்கள் கிடைத்துள்ள நிலையில், கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 
நகைக்கடையில் கொள்ளையடித்த பின்பு தப்பிச்சென்ற இடங்கள் தொடர்பான விவரங்களும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியகையுள்ளது.
 
மேலும் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதனுடன் தொடர்பு உள்ளதா? என்பதை அறிய திருவண்ணாமலைக்கு சென்னை போலீசார் விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு: விசாரணை அதிகாரி நியமனம்..!