பள்ளிகள் மட்டுமல்ல, கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை!
கனமழை காரணமாக இன்று மதியத்திற்கு மேல் இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் பள்ளிகளுக்கு மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிக அதிகமாக மழைபெய்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.
இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று மதியத்திற்கு மேல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் இன்று மதியத்திற்கு மேல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது