1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinakaran waiting for ADMK decision

அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் - டிடிவி தினகரன்!

அதிமுக
தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது, அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

 
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என சிலர் அவ்வபோது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சிக்கு இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேனி அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டபோது பலரும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். 
 
இந்நிலையில் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. நாங்கள் தவறு செய்யவில்லை. ஒட்டுமொத்த அதிமுக முடிவு வந்த பிறகுதான் எனது முடிவை அமமுகவினருடன் ஆலோசித்து எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
அதிமுகவில் மீண்டும் சசிக்கலா! தூது செல்லும் ஓபிஎஸ் சகோதரர்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!