40 லட்சமாக அதிகரிக்கும் உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை!
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சுமார் 10 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
உக்ரைனில் கடந்த 24 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. அன்று முதல் தற்போது வரை 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைன் மக்கள் தொகையில் 2 விழுக்காடு மக்கள் 7 நாட்களில் எல்லையை கடந்துள்ளனர். போர் நீடித்தால் இந்த எண்ணிக்கை 40 லட்சமாக அதிகரிக்கும் என்றும், மிகப்பெரிய விவகாரமாக இது உருவெடுக்கும் என்றும் ஐநா கூறியுள்ளது.