புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (11:49 IST)

அதிமுகவில் இணைகிறாரா சசிக்கலா?? – எடப்பாடியார் அவசர ஆலோசனை!

சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஓபிஎஸ்ஸிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில் சேலத்தில் எடப்பாடியார் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என சிலர் அவ்வபோது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கட்சிக்கு இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேனி அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டபோது பலரும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். அதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டியும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அதிமுக நிர்வாகிகளோடு அவசர கலந்தாலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக அதிமுகவில் சசிக்கலாவை இணைக்கப்போவதில்லை என எடப்பாடியார் உறுதியாக இருந்த நிலையில் தற்போது இந்த ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.