1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV dinakaran support MLA los hope with EPS

ஆதரவை வாபஸ் பெற்ற எம்.எல்.ஏக்கள் - ஆட்சியை தக்க வைப்பாரா எடப்பாடி?

TTV Dinakaran
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அதனால், அவருக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாகவும்  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.


 

 
தினகரனையும், சசிகலாவையும் ஒதுக்கிவிட்டு ஓ.பி.எஸ் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றினைந்துள்ளது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தனது ஆதரவாளர்களுடன் தினகரன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். 
 
இந்நிலையில், இன்று காலை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். அதில், முதல்வர் மீது தமிழக மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். நாங்களும் நம்பிக்கை இழந்துவிட்டோம். அதனால் அவருக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறோம். முதலமைச்சர் என்பவர் பாரபட்சமாகவும், நேர்மையானவராக இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செயல்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், 2011ம் ஆண்டில் கர்நாடகாவில் எடியூரப்பா சந்தித்த சூழலை உதாரணமாக கொள்ளும்படியும் கடிதத்தில் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். மேலும், ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இது எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியையும், தமிழக அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
தமிழகத்துக்கு மீண்டும் புதிய முதலமைச்சர்?